'ஒளவையார்' என்னும் மெல்லியலார் அருளிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, என்பனவாகிய நூல்களும், அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்ட வெற்றி வேற்கை எனும் நறுந்தொகை, சித்தாந்த சைவ மதத்தைச் சார்ந்த குமரகுருபர அடிகளாற் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நீதிநெறி விளக்கம், உலகநாதன் இயற்றிய உலகநீதி மற்றும் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல் ஆகிய நூல்கள் உள்ளன.
இவை சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியோர்க்கும் தினசரி வாழ்வில் மிகவும் பயனுள்ள நூல்களாகும். பெரியோர் தங்கள் பேரன் போத்திகளுக்கு இவைகளை போதிக்கலாம். இதனால் குழந்தைகள் இதனை அனுசரித்து தங்கள் வரிங்காலத்தில் இதையொட்டி வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
Comments will not be approved to be posted if they are SPAM, abusive, off-topic, use profanity, contain a personal attack, or promote hate of any kind.